Skip to main content

Posts

இஸ்லாத்தில் அழகியலின் பங்கு...

இஸ்லாத்தில் அழகியலின் பங்கு... இயற்கை மார்க்கமான இஸ்லாம் மனிதனது இயல்புக்கும் உள்ளுணர்வுக்கம் மதிப்புக் கொடுக்கிறது. அவனது ஆற்றல்களையும் உள்ளுணர்வுகளையும் திறமைகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றும் வழிகாட்டுகின்றது. இத்தகைய வழிகாட்டல்கள் இஸ்லாம் மனித இனத்திற்கு வழங்கிய மகத்தான அருட்கொடைகளாகும். அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்க முரண்பட்டதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் அதிக கவனம் செலுத்துகிறது.   கலையின் உயிர் சக்தியாக இருப்பது அழகாகும். இஸ்லாம் அழகை விரும்புகிறது “அல்லாஹ் அழகானவன் அவனே அழகை விரும்புகிறான் ” . என்ற நபியவர்களின் வார்த்தையானது அழகு என்பது ஒரு தெய்வீக பண்பு என்பதனை உணர்த்துகிறது. அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் பிரஸ்தாபிக்கப்படுகின்ற அழகு எனும் பொருளைத் தருகின்ற ஹுஸ்ன், ஜமால், ஸீனத் முதலிய பதங்கள் அழகியலின் அவசியத்தைப் பிரஸ்தாபிக்கின்றன. அல்குர்ஆனில் ஸீனத் எனும் பதம் புற அழகைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்க, ஹுஸ்ன், ஜமால் ஆகிய பதங்கள் புற அழகை மட்டுமன்றி செயற்பாடுகள், செயற்பாட்டு வழிமுறைகள், மனிதப் பண்புகள் முதலானவற்றில் அழ...
Recent posts

ஜனாஸாவுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்

ஜனாஸாவுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்.. ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு  பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான கவலையான நேரம் எது? கவலையான நேரம் எது? ஆயிஷா(ரலி):-  யா ரஸூல்லாஹ் அந்த மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும் நேரம் நபி(ஸல்):-  "இல்லை" ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்  அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு வருகிறோமே அதுதான் துயரமானது. நபி(ஸல்): "இல்லை ஆயிஷா(ரலி): நீங்களே  சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ் நபி(ஸல்):- ஒரு மனிதன் மரணித்துவிட்டால் , 1) அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்தும் எலும்புகளிலிருந்தும் உயிர் பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த மைய்யத்தும் அதை தாங்காது. 2) அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன் சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது "எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்  உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய் போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக நடந்துகொள். எனை இன்னும் நோகடித்து விடாதே எனக் கெஞ்சுகிற...

தௌஹீத் ஜமாஅத் || Thowheed jamath

  தௌஹீத் ஜமாஅத் அறிமுகம்:- 1948ம் ஆண்டு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (தர்வேஷ் ஹாஜியார்) என்பவர் மூலம் அறிமுகமானது. அவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே "ஜம்இய்யது அன்ஸாரிய ஸுன்னதில் முஹம்மதியா" எனும் அமைப்பாகும். இதுவே இலங்கையில் தௌஹீத் கோட்பாடு பரவுவதற்கு முன்னோடியாக இருந்த அமைப்பாகும். தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1). முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இஸ்லாம் முற்றுப் பெற்று விட்டது. இதன் அடிப்படை மூலாதாரங்கள் அல் குர்ஆனும், ஸுன்னாவுமே. இது இரண்டினையும் தவிர வேறு எந்த மனிதரது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது. 2). நபியவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தில் எவையெல்லாம் நன்மை தரும் எனக் கருதி புதிதாக சேர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் தெளிவான பித்அத்துக்களே. 3). வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். அதனை அவன் என்றுமே மன்னிக்கமாட்டான். மகான்கள், அவ்லியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும், பெரியோர்களின் ஸியாரம் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் க...

தப்லீக் ஜமாஅத் || Thableek jamath

  தப்லீக் ஜமாஅத் 🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧 அறிமுகம் :-  🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧 இலங்கையில் 1950 களில் மௌலான அப்துல் மலிக்கினால் தப்லீக் பணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. எனினும் 1953 களில் இந்தியாவில் இருந்து வந்த மௌலான தாவூத் மேவாத்தி என்பவரே தப்லிக் ஜமாஅத்தை சிறந்த முறையில் அறிமுகம் செய்தவராகக் கருதப்படுகின்றார். இவ்வியக்கம் இலங்கை வாழ் பாமர முஸ்லிம்களை தொழுகையின் பால் ஈர்ப்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றது. வழி தவறிப்போன எத்தனையோ பாமர முஸ்லிம்களை நெறிப்படுத்தி இஸ்லாமியப் பண்புள்ளவர்களாக மாற்றியுள்ள பெருமை இவ்வியக்கத்தைச் சாரும். இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. இதற்கு ஆதாரமாக 1996ல் புத்தளத்தில் இடம்பெற்ற இஜ்திமாவைக் குறிப்பிடலாம்.  தப்லீக் இயக்கத்தில் ஈடுபடுபவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை மெளலான இல்யாஸ் (ரஹ்) அவர்கள் ஆறு அம்சங்களாக அடக்கியிருந்தார். அவற்றைப் பின்பற்றி தனது இயக்க நடவடி...

ஏழை வரி || ஜக்காத் கொடுக்காதவரின் நிலை என்ன? || What is the status of one who does not pay Zakat?

  ஏழை வரி || ஜக்காத் கொடுக்காதவரின் நிலை என்ன? 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 📖 எந்த மனிதர்க்கு அருளைக் கொடுத்து அவன் அதன் (ஏழைவரியை) ஜகாத்தை கொடுக்க வில்லையோ அவனுடைய பொருளை மறுமை நாளில் தலையில் முடி இல்லாத கண்களின் மேல் இரண்டு கரும்புள்ளிகள் உள்ள பாம்பாக மாற்றப்படும். பின்பு அப்பாம்பை அவனுடைய கழுத்தில் மாலையைப் போல் போடப்படும். அது 'நான் தான் உனது பொருளாகவும், பொக்கிஷமாகவும் இருக்கிறேன்' என்று கூறி அவனை கடித்து வேதனை படுத்தும்.  நூல்: புகாரி 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 📖 ஏதாவது ஒரு பொருளில் ஜகாத் (ஏழைவரி) கலந்து விடுமானால் அந்தப் பொருளை அது அழிக்காமல் விடுவதில்லை. நூல்: மிஷ்காத் 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 📖 ஏழைகளின் துஆ (பிரார்த்தனை) இல்லை என்றால் செல்வந்தர்கள் அழிந்தே போவார்கள். அல்ஹதீஸ் 🚥🚥🚥🚥🚥🚥...

உமையா ஆட்சி எவ்வாறு தோற்றம் பெற்றது???

  உமையா ஆட்சின் தோற்றம் முஆவியா (ரழி) அவர்களால் ஹிஜ்ரி 41ல் உமையா கிலாபத் தோற்றுவிக்கப்பட்டது. அறேபியாவில் குறைஷிக்குலத்தினர் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு குலத்தினர்களாக காணப்பட்டனர். அக்குலத்தில் முக்கிய ஒருவராக விளங்கிய அப்துல் மனாப் என்பவருக்கு ஹாஷிம் , அப்துஷ்ஷம்ஸ் எனும் இரு புத்திரர்கள் இருந்தனர். இவர்களில் ஹாஷிமுடைய சந்ததியினர் ஹாஷிமியாக்கள் எனவும், அப்துஷ் ஷம்ஸுடைய மகனாகிய உமையாவுடைய சந்ததியினர் உமையாக்கள் எனவும் அழைக்கப்பட்டனர். அலி (ரழி) அவர்களுக்குப் பிறகு உமையா வம்சத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதால் அவர்களது ஆட்சிக் காலத்தை உமையா கிலாபத் என அழைப்பர். நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே உமையா பிரமுகர்கள் பலர் பல முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். உதாரணமாக 🔴 உமையாவின் பேரரான அபூஸுப்யானுக்கு மகனாகப் பிறந்த முஆவியா (ரழி) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வஹீ எழுதுபவர்களில் ஒருவராகக் கடமையாற்றினார். 🔴 முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் உதவிப்படையொன்றின் தளபதியாக இவரை நியமித்து சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். 🔴 உமர் (ரழி) இவரை  சிரியாவிலுள்ள ஜோர்தான் எனும் ம...

கலீபா உமர் (ரலி) எவ்வாரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?? || History of Caliph Umar's (RA) Acceptance of Islam

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 கலீபா உமர் (ரலி) எவ்வாரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?? || History of Caliph Umar (RALI) Acceptance of Islam  🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 நுபுவ்வத்தின் 6ம் ஆண்டில், குறைஷ் வர்க்கத்திலிருந்து  இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார் உமர் (ரலி). இவர் மிகப்பலம் வாய்ந்தவர். தாருந் நத்வா என்ற இடத்தில் குறைஷியர்கள் ஒன்றுகூடி நபி (ஸல்) அவர்களின் பிரசாரத்தைத் தடுக்குமுகமாக அவர்களைக் கொலை செய்வதற்கு முடிவு செய்தார்கள். இதன் பிரகாரம் நபி (ஸல்) அவர்களின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு பெறுமதி வாய்ந்த சன்மானம் வழங்குவதாக முடிவுசெய்யப்பட்டது. இதனால் தூண்டப்பட்டு அந்த சன்மானத்தை தான் பெறவேண்டும் என்பதற்காக உமர் (ரழி) அவர்கள் தங்களது வாளை உருவியவர்களாக நபியவர்கள் இருக்குமிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் அவ்வழியில் வந்த ஸஹாபி ஒருவரை உமர் (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். அவ்வேளை அந்த ஸஹாபி உமர் (ரழி) அவர்களிடம்  உமரே நீர் எங்கே செல்கின்றீர்?? என்று செல்லுமிடம் பற்றி வினவிய போது உமர் (ரழி)...