தௌஹீத் ஜமாஅத்
அறிமுகம்:-
1948ம் ஆண்டு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (தர்வேஷ் ஹாஜியார்) என்பவர் மூலம் அறிமுகமானது. அவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே "ஜம்இய்யது அன்ஸாரிய ஸுன்னதில் முஹம்மதியா" எனும் அமைப்பாகும். இதுவே இலங்கையில் தௌஹீத் கோட்பாடு பரவுவதற்கு முன்னோடியாக இருந்த அமைப்பாகும்.
தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1). முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இஸ்லாம் முற்றுப் பெற்று விட்டது. இதன் அடிப்படை மூலாதாரங்கள் அல் குர்ஆனும், ஸுன்னாவுமே. இது இரண்டினையும் தவிர வேறு எந்த மனிதரது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது.
2). நபியவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தில் எவையெல்லாம் நன்மை தரும் எனக் கருதி புதிதாக சேர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் தெளிவான பித்அத்துக்களே.
3). வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். அதனை அவன் என்றுமே மன்னிக்கமாட்டான். மகான்கள், அவ்லியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும், பெரியோர்களின் ஸியாரம் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் கொண்டாடுவதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
4). அல்லாஹ் அல்லாதோருக்கு நேர்ச்சை செய்தல், கல்லறைகளைக் கட்டுதல், அங்கு சென்று இறைஞ்சுதல், பிரார்த்தனை செய்தல், கொடியேற்றுதல் யாவும் நூதன வழிபாடு (பித்அத்)
5). ஹத்தம் என்ற பெயரில் குர்ஆனை ஓதி (கூலி கொடுத்து) அதன் நன்மைகளை மரணித்தவர்களுக்குச் சேர்க்கலாம் என்பதும் மடமையாகும்.
அந்த வகையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட ஷிர்க், பித்அத், மூடநம்பிக்கைகள் என்பவற்றைக் களைந்து இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்றத் தக்க வகையில் தமது பிரச்சாரப் பணிகளை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றன.
Paragahakotuwa
Comments
Post a Comment