கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat?
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
மக்களாட்சியை அல்லது பிரதிநிதித்துவ ஆட்சியை "கிலாபத்" எனப்படுகின்றது.
அதாவது மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற வகையில் அவர்கள் மீது கட்டாயப்படுத்தியுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். சாத்தியமாகாத நிலையில் தமக்குள் தலைவரை தெரிவு செய்து அவருக்கு பரிபாலன உரிமையை வழங்குகின்ற ஆட்சி முறை கிலாபத் எனப்படுகிறது.
பொதுவாக நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் இடம் பெற்ற கலீபாக்களின் ஆட்சியைக் குறிக்கவே இப்பதம் கையாளப்படுகிறது.
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
"முல்கியத்" என்றால் என்ன?
மன்னர் ஆட்சி முறையை அல்லது பரம்பரை ஆட்சி முறையை 'முல்கியத்" என அழைக்கப்படுகிறது. அதாவது வாரிசுரிமை அடிப்படையில் ஆட்சித்தலைவர் தெரிவு செய்யப்பட்டு பரிபாலனம் செய்யப்படுகின்ற ஆட்சி ஒழுங்கு முல்கியத் எனப்படுகிறது.
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
கலீபாவுக்கான தகைமைகளை "அல்மாவர்தி" பின்வருமாறு குறித்துள்ளார்.
1- களங்கமற்ற நேர்மையுடையவராக இருத்தல்.
2- தீன், ஷரீஆ பற்றிய அறிவுடையவராக இருத்தல்.
3-புலன்களில் குறைபாடோ, அங்கவீனமோ இல்லாதிருத்தல்.
4.நிர்வாகத்திறமையும், மக்களை பரீபாலிக்கும் ஆற்றலும் உடையவராக இருத்தல்.
5- எதிரிகளுடன் போராடி நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் துணிவு உடையவராக இருத்தல்.
6- குறைஷியராய் இருத்தல்.
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
Paragahakotuwa
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
Comments
Post a Comment