தப்லீக் ஜமாஅத்
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
அறிமுகம்:-
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
இலங்கையில் 1950 களில் மௌலான அப்துல் மலிக்கினால் தப்லீக் பணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. எனினும் 1953 களில் இந்தியாவில் இருந்து வந்த மௌலான தாவூத் மேவாத்தி என்பவரே தப்லிக் ஜமாஅத்தை சிறந்த முறையில் அறிமுகம் செய்தவராகக் கருதப்படுகின்றார்.
இவ்வியக்கம் இலங்கை வாழ் பாமர முஸ்லிம்களை தொழுகையின் பால் ஈர்ப்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றது. வழி தவறிப்போன எத்தனையோ பாமர முஸ்லிம்களை நெறிப்படுத்தி இஸ்லாமியப் பண்புள்ளவர்களாக மாற்றியுள்ள பெருமை இவ்வியக்கத்தைச் சாரும்.
இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. இதற்கு ஆதாரமாக 1996ல் புத்தளத்தில் இடம்பெற்ற இஜ்திமாவைக் குறிப்பிடலாம்.
தப்லீக் இயக்கத்தில் ஈடுபடுபவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை மெளலான இல்யாஸ் (ரஹ்) அவர்கள் ஆறு அம்சங்களாக அடக்கியிருந்தார். அவற்றைப் பின்பற்றி தனது இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவை ஆறு நம்பர்கள் என அழைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு.
- கலிமா
- தொழுகை
- கல்வியும், தியானமும் (இல்முதிக்ர்)
- முஸ்லிம்களுக்கு மரியாதை செய்வது (இக்ராம்)
- எண்ணப் பரிசுத்தம் (இஹ்லாஸ்)
- சன்மார்க்க விடயத்தில் காலத்தை ஒதுக்குவது (தப்லீக்)
Paragahakotuwa
Comments
Post a Comment