கலீபா உமர் (ரலி) எவ்வாரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?? || History of Caliph Umar's (RA) Acceptance of Islam
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
கலீபா உமர் (ரலி) எவ்வாரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?? || History of Caliph Umar (RALI) Acceptance of Islam
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
நுபுவ்வத்தின் 6ம் ஆண்டில், குறைஷ் வர்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார் உமர் (ரலி). இவர் மிகப்பலம் வாய்ந்தவர்.
தாருந் நத்வா என்ற இடத்தில் குறைஷியர்கள் ஒன்றுகூடி நபி (ஸல்) அவர்களின் பிரசாரத்தைத் தடுக்குமுகமாக அவர்களைக் கொலை செய்வதற்கு முடிவு செய்தார்கள்.
இதன் பிரகாரம் நபி (ஸல்) அவர்களின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு பெறுமதி வாய்ந்த சன்மானம் வழங்குவதாக முடிவுசெய்யப்பட்டது. இதனால் தூண்டப்பட்டு அந்த சன்மானத்தை தான் பெறவேண்டும் என்பதற்காக உமர் (ரழி) அவர்கள் தங்களது வாளை உருவியவர்களாக நபியவர்கள் இருக்குமிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
அச்சந்தர்ப்பத்தில் அவ்வழியில் வந்த ஸஹாபி ஒருவரை உமர் (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். அவ்வேளை அந்த ஸஹாபி உமர் (ரழி) அவர்களிடம்
உமரே நீர் எங்கே செல்கின்றீர்?? என்று செல்லுமிடம் பற்றி வினவிய போது உமர் (ரழி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களின் கழுத்தை வெட்டி எடுப்பதற்காக சென்று கொண்டிருக்கின்றேன் எனக் கூறினார்கள்.
அதற்கு அந்த ஸஹாபி முதலில் உங்களது வீட்டுக்குச் சென்று பாருங்கள் என்று குறிப்பிட்டார்.
இவரது வார்த்தையை கேட்டு உமர் (ரழி) அவர்கள் தன் வீட்டுக்குச் சென்ற போது அங்கு தன் தங்கையும், அவரது கணவரும் அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருந்ததை செவியுற்றார்கள்.
முதலில் ஆத்திரமுற்ற உமர் அவர்கள் பின் அதனை தனக்கும் கற்றுத்தருமாறு வினவினார்கள். இவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தங்கை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பணித்தார்கள்.
இதனை ஏற்ற உமர் அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்காக இறைவனிடம் கேட்ட துஆ அங்கீகரிக்கப்பட்டது.
இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ரழியல்லாஹு அன்ஹு (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்) என்ற உயர் பாக்கியத்தை பெற்றுக்கொண்டார்கள்.
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
உமர் (ரலி) அவர்கள் எவ்வாறு கலீபா ஆனார்??
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
இஸ்லாமியக் குடியரசின் முதலாவது கலீபாவான அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணத்தை தொடர்ந்து கலீபா உமர் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 13ல் விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டார்கள்..
தனது இறுதி நாள் நெருங்கி விட்டதை மானசீகமாக அறிந்துகொண்ட அபூபக்கர் தனக்குப்பின்னர் இஸ்லாமிய அரசை பொறுப்பேற்று நடாத்த வேறொருவரை கலீபாவாக நியமிப்பதன் அவசியத்தை உணர்ந்தார்.
அதற்கு உமரே தகுதியானவர் என்று கருதினார். தனது கருத்தை தோழர்களிடமும், முக்கியமானவர்களிடமும் தெரிவித்தார். அவர்களும் ஏற்றுக்கொள்ளவே
உஸ்மான் (ரழி) அவர்களை அழைத்து அடுத்த கலீபாவாக உமர் (ரழி) அவர்களை நியமிப்பதாக நியமனப்பத்திரம் ஒன்றை எழுதி பொதுமக்கள் மத்தியில் வாசித்துக் காட்டச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து எல்லோரும் உமர் (ரழி) அவர்களுக்கு பைஅத் செய்து கொடுத்தனர். இதன் மூலம் ஹிஜ்ரி 13ல் உமர் (ரழி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபாவாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
PARAGAHAKOTUWA
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Comments
Post a Comment