அல்லாஹ் இவ்வுலகை படைத்து அவனை வணங்கும்படி மனிதர்களையும் ஜின்களையும் படைத்தான்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்
1) கலிமா
2) தொழுகை
3) ஸக்காத்
4) நோன்பு
5) ஹஜ்
நோன்பு
இஸ்லாத்தின் நான்காவது கடமையாக நோன்பு காணப்படுகிறது. இஸ்லாமிய கணக்கின்படி ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்கள்: புகாரீ (1898)
மேலும் ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
ரமழான் மாதம் எப்படி என்றால்!..
நேர்வழியை தெளிவுபடுத்தி (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டக்கூடிய குர்ஆன் அம்மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழியாக அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர்கள் அதில் நோன்பு நோற்க வேண்டும். நோயாளியாகவோ பயனியாகவோ இருப்பவர்கள் வேறு ஒரு நாளில் (விடுபட்ட நோன்புகளை) நோற்கட்டும்…. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தி நன்றி செலுத்த வேண்டும்.
அல்குர்ஆன் (2 : 186)
இந்த ரமழானை மூன்று கட்டங்களாக 10 து 10 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிப் பத்து பற்றி பார்ப்போம்.
* இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின்,
முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!
ஸஹீஹ் புகாரி
* இந்த மகத்துவமிக்க இரவு எந்தநாளில் வரும் என்பதை சொல்லாமல் பொதுவாக நபிகள் நாயகம்(ஸல்) ரமலான் கடைசி பத்து நாட்களில் அதுவும் ஒற்றைப்படையில் தேடுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்...
எமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில்
எனவே நாம் அதிக அதிகமாக நன்மைகளை செய்து அதிக அதிகமாக பாவ மன்னிப்பை தேடி மாத்துவமான இம்மாதத்தை சிறப்பாக நன்மையான காரியங்களில் செலவழித்து ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அடைவதற்கு அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
Comments
Post a Comment