Skip to main content

Posts

Showing posts from May, 2023

இஸ்லாத்தில் அழகியலின் பங்கு...

இஸ்லாத்தில் அழகியலின் பங்கு... இயற்கை மார்க்கமான இஸ்லாம் மனிதனது இயல்புக்கும் உள்ளுணர்வுக்கம் மதிப்புக் கொடுக்கிறது. அவனது ஆற்றல்களையும் உள்ளுணர்வுகளையும் திறமைகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றும் வழிகாட்டுகின்றது. இத்தகைய வழிகாட்டல்கள் இஸ்லாம் மனித இனத்திற்கு வழங்கிய மகத்தான அருட்கொடைகளாகும். அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்க முரண்பட்டதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் இஸ்லாம் அதிக கவனம் செலுத்துகிறது.   கலையின் உயிர் சக்தியாக இருப்பது அழகாகும். இஸ்லாம் அழகை விரும்புகிறது “அல்லாஹ் அழகானவன் அவனே அழகை விரும்புகிறான் ” . என்ற நபியவர்களின் வார்த்தையானது அழகு என்பது ஒரு தெய்வீக பண்பு என்பதனை உணர்த்துகிறது. அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் பிரஸ்தாபிக்கப்படுகின்ற அழகு எனும் பொருளைத் தருகின்ற ஹுஸ்ன், ஜமால், ஸீனத் முதலிய பதங்கள் அழகியலின் அவசியத்தைப் பிரஸ்தாபிக்கின்றன. அல்குர்ஆனில் ஸீனத் எனும் பதம் புற அழகைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்க, ஹுஸ்ன், ஜமால் ஆகிய பதங்கள் புற அழகை மட்டுமன்றி செயற்பாடுகள், செயற்பாட்டு வழிமுறைகள், மனிதப் பண்புகள் முதலானவற்றில் அழ...

ஜனாஸாவுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்

ஜனாஸாவுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்.. ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு  பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான கவலையான நேரம் எது? கவலையான நேரம் எது? ஆயிஷா(ரலி):-  யா ரஸூல்லாஹ் அந்த மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும் நேரம் நபி(ஸல்):-  "இல்லை" ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்  அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு வருகிறோமே அதுதான் துயரமானது. நபி(ஸல்): "இல்லை ஆயிஷா(ரலி): நீங்களே  சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ் நபி(ஸல்):- ஒரு மனிதன் மரணித்துவிட்டால் , 1) அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்தும் எலும்புகளிலிருந்தும் உயிர் பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த மைய்யத்தும் அதை தாங்காது. 2) அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன் சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது "எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்  உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய் போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக நடந்துகொள். எனை இன்னும் நோகடித்து விடாதே எனக் கெஞ்சுகிற...